டைம்ஸ் தமிழ் 2019 சினிமா விருதுகள். சிறந்த குப்பை படத்துக்கு இத்தனை போட்டியா?

மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் 2019வது ஆண்டுக்கான சிறந்த குப்பை திரைப்படத்துக்கு விருது வழங்குவதில் பெருமைப்படுகிறது டைம்ஸ் தமிழ் நிறுவனம். கடந்த ஆண்டு ஏராளமான சிறு மற்றும் குறும் படங்கள் மொக்கையாக, படு திராபையாக வந்திருக்கின்றன என்றாலும், அவற்றை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கோடிகளைக் கொட்டி கேவலமாக எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே இந்த ஆண்டு குப்பை படத்துக்கு தேர்வு செய்யப்பட்டன.

சூர்யாவுக்கு என்.ஜி.கே., சிவகார்த்திகேயனுக்கு மிஸ்டர் லோக்கல், விஜய் சேதுபதிக்கு சங்கத்தமிழன் மற்றும் சிந்துபாத், தமிழுக்கு கொஞ்சமும் ஒத்துவராத ஆதித்ய வர்மா, தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா என்று குப்பை படத்திற்கு விருது வாங்குவதில் போட்டியோ போட்டி.

இந்தப் படங்களை அலசி ஆராய்ந்ததில், குப்பை படத்தில் நடித்த கதாநாயகநான விஜய் சேதுபதிக்கு கடும் போட்டியையும் அவரே கொடுத்திருக்கிறார். ஆம், சிந்துபாத் படத்துக்கும் சங்கத்தமிழன் படத்துக்கும்தான் செம போட்டி. குப்பையில் எது நல்ல குப்பை என்று தேடுவதும் கஷ்டம்தான்.

ஒருவழியாக மூக்கை பொத்திக்கொண்டு தேடியதில், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் 2019ம் ஆண்டுக்கான சிறந்த குப்பை படத்துக்கான விருது பெறுகிறது. மீண்டும் இதுபோன்று ஒரு படம் மீண்டும் தயாரிக்கக்கூடாது என்று பாரதி ரெட்டியை எச்சரிப்பதற்காகவும், இப்படியொரு படத்தில் இனி நடிக்கக்கூடாது என்று விஜய் சேதுபதிக்கு தெரிவிக்கவும், இனி படம் இயக்கவே வேண்டாம் என்று விஜய் சந்தருக்கு அறிவுறுத்தவும், குப்பை விருது சங்கத்தமிழன் படத்துக்கு வழங்கப்படுகிறது.

இதுக்கெல்லாம் வாழ்த்துக்களை எதிர்பார்க்காதீங்க பாஸ்.