டைம்ஸ் தமிழ் 2019 டிஜிட்டல் விருதுகள். முதல் விருது புள்ளிங்கோவை தூக்குவாரா முகேன் ராவ்..?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் விருதுகளை அறிவிப்பதில் டைஸ் தமிழ் பெருமைப்படுகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் எதுவென பார்க்கலாம்.

தமிழில் நகைச்சுவை ஸ்கிட் வெற்றி அடைந்த அளவுக்கு இன்னமும் ஆல்பம் வெற்றி அடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும், தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. 

இந்த ஆண்டு வெளியான புள்ளிங்கோ பாடல் செம செம ஹிட். செம்மன்சேரி கானா ஸ்டீபன் டாடலை, பட்ஜெட் காரணமாக படமாக்கப்பட்ட விதம் சுமாராக இருந்தாலும், டிக் டாக் மூலம் மிகவும் பிரபலம் இந்தப் பாடல்தான். இதனை ரிச்சாக படமாக்கியிருந்தால் எங்கேயோ போயிருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. 

இ.மியூசிக் ஆல்பத்தில் முகேன் ராவ் வெளியிட்டிருக்கும் நீதான்.. நீதான் பாடல் வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் ஜஸ்ட் டிஃபரெண்ட். அதனால் குறுகிய காலத்தில் பாடலும் ஹிட் ஆகியிருக்கிறது. புள்ளிங்கோ ஒரு விதம் என்றால், முகேன் இன்னொரு விதம்.

ஆனால், டிரெண்டிங் என்ற வகையிலும், நல்ல முயற்சி என்ற வகையிலும் புள்ளிங்கோ டீமுக்கு விருது செல்கிறது. சபாஷ் புள்ளீங்கோ.