மீண்டும் மோடிதான் பிரதமர்! டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு மோடி மீண்டும் வருவார் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நாடு முழுவதும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சுமார் 17 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 38.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது. இந்த வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை காட்டிலும் சுமார் 2 விழுக்காடு குறைவு தான்.

அதேசமயம் பாஜக தலைமையிலான கூட்டணி சுமார் 283 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. பாஜக 283 இடங்களை கைப்பற்றும் நிலையில் மீண்டும் மோடி பிரதமராவது உறுதி என்றும் டைம்ஸ் நவ் கூறியுள்ளது.

அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகமான இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ் கணித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு சுமார் முப்பத்தி ஆறு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அங்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 42 இடங்கள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் கூறுகிறது.