டைம்ஸ் தமிழ் 2019 டிஜிட்டல் விருதுகள். விருது வாங்குவது விஜயகுமாரா அல்லது ஸ்ரீராமா..?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் விருதுகளை அறிவிப்பதில் டைஸ் தமிழ் பெருமைப்படுகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் நடிகர் யாரென பார்க்கலாம்.

யுடியூப் பக்கம் யாராவது ஒருவர் வருகிறார் என்றால் பொழுதுபோக்கவும், மனம் விட்டு சிரிப்பதற்காகவும் மட்டும்தான். ஆகவே, இங்கு நவரச நடிப்பை யாரும் எதிர்பார்த்து வருவதில்லை. அப்ப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, அதிரடியாக கலங்கடிப்பதில் கிங்காக இருக்க வேண்டும்.

அந்த வகையில் எரும சனி விஜயகுமாருக்கு உடலும், முகமும் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறது. தெரிந்தோ தெரியாமலோ அவர் காட்டும் முகபாவம் பளீச்சென சிரிக்க வைக்கிறது. ஆனாலும் இவர் முழுமையாக ஸ்கிரிப்ட்டை நம்பியே பயணப்படுகிறார்

தனி நபராக நகைச்சுவையைக் கொண்டுபோக முயற்சி செய்பவர் மைக் செட் ஸ்ரீராம். இவர் சிறப்பாக நடித்தாலும், ஸ்க்ரிப்ட் அத்தனை கட்டுக்கோப்பாக இவருக்கு அமையவில்லை. அதனால் சட்டென ஒருசில சீன்களில் மட்டுமே மின்னுகிறார்.

ஆகவே, 2019ம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் நடிகராக விஜயகுமாரை தேர்வு செய்கிறது டைம்ஸ் தமிழ். இவர் மென்மேலும் வளர டைம்ஸ் தமிழின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.