டைம்ஸ் தமிழ் 2019 இசை விருதுகள். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானா… அனிருத்தா?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


2019ம் ஆண்டின் சிறந்த சினிமா விருதுகள் அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. வெற்றி பெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

2018ம் ஆண்டு போல இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டி இருந்தது. ஆனால், இந்த 2019ம் ஆண்டு மூன்று பேர்தான் போட்டியிலே இருக்கிறார்கள். அவர்களில் கோமாளி, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களுக்கு சிறப்பாக இசை அமைத்திருந்தார் ஹிப்ஹாப் தமிழா

இன்றைய இளசுகளின் நாடி, நரம்புகளை எல்லாம் அறிந்து வைத்திருக்கும் அனிருத் இசையமைத்த பேட்ட, தமிழ் நாட்டையே கலகலப்பாக்கியது. சூப்பர்ஸ்டாரும் அனிருத்தும் சேர்ந்து இளமை துள்ளும் வகையில், மாஸ் மரணத்தைக் காட்டியிருந்தார்கள்.

ஆனால், இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆம், பிகில் படத்தில் தன்னுடைய அனுபவத்தை ஒட்டுமொத்தமாக பிழிந்துகொடுத்து, அத்தனை பேர் மனதிலும் என்றைக்கும் நானே ராஜா என்று காட்டிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் காட்டிய வெறித்தனம்தான் 2019ம் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்ய வைத்திருக்கிறது. 

ஒரே படத்தில் நம்பிக்கையூட்டும் சிங்கப்பெண்ணே, எழுச்சியூட்டும் வெறித்தனம், சூப்பர் மெலடியான உனக்காக வாழ நினைக்கிறேன் என்று அத்தனை உணர்வுகளையும் கொண்டுவந்து விருதை தட்டிச்செல்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசைப்புயலுக்கு டைம்ஸ் தமிழின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.