பிரதமர்ன்னு பார்க்காம கிண்டல் செய்றாங்களே! மோடிக்கு நேரம் சரியில்லைதான்!

காஷ்மீர், முத்தலாக், அயோத்தி என்று வெற்றி மீது வெற்றி பெற்றுக்கொண்டிருந்த மோடிக்கு அசிங்கத்தின் அசிங்கமாக மகாராஷ்டிரா வந்து அமைந்துவிட்டது.


அதன்படி, இப்போது மோடியின் பழைய விவகாரங்களையும் தேடி எடுத்து பதிவிடுகிறார்கள். இப்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக இருப்பது இந்த பதிவுதான். அதாவது, மோடி ஊழல் செய்யமாட்டார்; ஊழல் செய்யவும் விடமாட்டார் என்பதுதான்.

"இந்தியாவில் ஊழலற்ற ஒரே கட்சி பா.ஜ.க." _ இந்த வரிகளை 50 தபால் அட்டைகளில் எழுதி உடனடியாக 50 நண்பர்களுக்கு அனுப்பினால், 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.

மேற்கு வங்கத்தில் முகுல் ராய் என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த சாரதா சிட்பண்ட் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் 200 பேருக்கு அனுப்பினர். அவர்கள் மேல் இருந்த சுரங்க வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. ஹரியானாவில் துஷ்யந்த் சௌதாலா என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவரது தந்தைக்கு உடனே ஜாமீன் வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிராவில் அஜித் பவார் 300 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த ஒன்பது வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. மேலும் ஜார்கண்ட், அஸ்ஸாம் மாநிலத்திலும் தபால் அட்டை அனுப்பி பலனடைந்துள்ளனர். தமிழகத்தில் ப.சிதம்பரம் என்பவர் தபால் அட்டை அனுப்பாமல் அசட்டையாக இருந்துவிட்டார். இப்போது சிறையில் சிரமப்படுகிறார் என்று மரண கலாய் செய்கிறார்கள்.