கொரோனா வந்தும் அடங்காத டிக் டாக் பூஜா..! தனிமை வார்டில் போட்ட ஆட்டத்தால் 3 நர்ஸ்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டிக் டாக் செயலி மூலம் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை அங்குள்ள ஊழியர்களிடம் காட்டி மகிழ்ந்துள்ளார்.


இதன் காரணமாக மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அரியலூர் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அரசுத்துறை அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த வைரஸிற்கு உலக நாடுகளில் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரிமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உறவினர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்த போது அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அவர்களை அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தனது செல்போனில் டிக் டாக் செய்து செய்து வந்துள்ளார்.

இதையடுத்து அவர் தனது பெட்டில் படுத்துக் கொண்டு "கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான். அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்' கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ..' இப்படியே வாழந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழுடா.. மனுச பய இடம் மட்டும் மண்ணாகி போகும்டா'  என்ற வாசகத்தை டிக்டாக்கில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனை அங்குள்ள ஊழியர்கள் அனைவரிடமும் காட்டி மகிழ்ந்துள்ளார். அவரது செல்போன்களை வாங்கி அனைவரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இதையடுத்து இதையறிந்த மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் செல்போனை வாங்கி பார்த்த அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என அஞ்சி அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட மருத்துவமனை ஊழியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் இதன் காரணமாக 3 ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட யாரும் யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என அறிவித்த பின்னரும் இந்த மாதிரியான செயல்கள் மூலம் ஒருவருக்கொருவர் நெருங்குவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் எனவே இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடக்கூடாது என அப்பெண்ணிற்கு மருத்துவமனை ஊழியர்கள் அட்வைஸ் கூறியுள்ளனர்.