படவாய்ப்புகளுக்காக படுக்கை அறையில்..! டிக் டாக் இலக்கியா அடுத்தடுத்து வெளியிடும் சீக்ரெட்ஸ்!

சென்னை: பட வாய்ப்பு தருவதாகக் கூறி பலர் என்னை ஏமாற்றிவிட்டார்கள், என்று டிக் டாக் பிரபலம் இலக்கியா புகார் தெரிவித்துள்ளார்.


டிக் டாக் செயலி வந்தது முதலாக, பலரும் டப்மாஷ் முறையில் பல விதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகின்றனர். அதில் குறிப்பாக, இளம்பெண்கள், நடுத்தர வயது பெண்கள் பலரும் ஆபாசமான வீடியோக்கள், கவர்ச்சியான போஸ்களை பதிவாக வெளியிட்டு,  டிக் டாக் பயனாளர்களை கிறங்கடித்து வருகின்றனர். இதனால், டிக் டாக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, டிக் டாக் சென்றால்  சினிமா கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு அதீத கவர்ச்சிகரமான பெண்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.  

இப்படி பல கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்தான் இலக்கியா. டிக் டாக்கில் ஆபாசமான வீடியோ, டபுள் மீனிங் டயலாக் பேசி  பலரையும் வாய் பிளக்கச் செய்யும் இலக்கியாவின் பெயரை பயன்படுத்தி பலர் டிக் டாக்கில் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். ஆனால், தான் யாரிடமும் பணம் பறிக்கவில்லை என்றும்,  தனது பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் இலக்கியா, சென்னை மாநகர போலீசில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.  

இவர் கடந்த ஆண்டு வெளியான ஜாம்பி படத்தில் நடித்திருந்தார். பிறகு, அதேபோல பட வாய்ப்புகள் தருவதாகப் பலர் கூறி, செக்ஸ் வைத்துவிட்டு, பின்னர்  ஏமாற்றி விட்டதாகவும் இலக்கியா புகார் கூறியுள்ளார். இந்த புகாரை வழக்கமாக ஸ்ரீரெட்டிதான் கூறுவார். ஆனால், ஸ்ரீரெட்டியை போலவே தற்போது மற்றொரு பெண் சினிமா பிரமுகர்கள் மீது செக்ஸ் மோசடி புகார் கூற தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.