பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பத்திகிச்சி! டிக் டாக் தோழியுடன் குடும்பம் நடத்தும் மனைவி! 2 மகன்களுக்காக தவிக்கும் கணவன்!

டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான பெண்ணுடன் திருமணமான பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் ஆந்திரா அருகே நடந்தேறியுள்ளது.


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு அர்ச்சனா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். 

இந்நிலையில் அர்ச்சனா ஆசைப்பட்டதால் ரவிச்சந்திரன் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்த அர்ச்சனா, தொடர்ந்து நாளுக்கு நாள் வீடியோக்களை பதிவிட்டு அதற்கு அடிமையாகி உள்ளார்.  

இதனை கணவர் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கும் இதே வேலையை தொடர்ந்து செய்து வந்ததால் பெற்றோர்களும் அர்ச்சனாவை கண்டித்துள்ளனர்.  

நாளுக்குநாள் அர்ச்சனாவின் செயல் மோசமடைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான அர்ச்சனாவின் சகோதரியின் தோழி அஞ்சலி என்பவருடன் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். உடன் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 

அஞ்சலி அவ்வப்போது அர்ச்சனாவின் வீட்டிற்கு வந்ததும் இதனை கணவர் ரவிச்சந்திரன் கண்டித்தும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.  ஆண் வேடமிட்டு அர்ச்சனாவை மயக்கி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றிருக்கிறார் அஞ்சலி என ரவிச்சந்திரன் புகார் அளித்திருக்கிறார்.