நிஜ துப்பாக்கியுடன் டிக்டாக் வீடியோ! 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்!

நிஜ துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞனுக்கு மிகப்பெரிய பயங்கரம் நேர்ந்துள்ளது.


டெல்லியை சேர்ந்த சல்மான் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் உல்லாச பயணம் சென்றுள்ளார். அப்போது அவர்கள் டிக் டாக் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

உற்சாக மிகுதியில் இருந்த சல்மான் தன்னிடம் உள்ள நிஜ துப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார். அப்போது தவறுதலாக துப்பாக்கி திடீரென வெடித்தது. இதனால் சால்மானின் கன்னத்தில் குண்டு பாய்ந்துள்ளது. 

இதனால் பதறிய அவரது நண்பர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சல்மானை அனுமதித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சல்மான் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிக்டாக் வீடியோவால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.