டிக் டாக்கில் தலித்துகள் குறித்து ஆபாச அவதூறு! கொடூர கொலை! பாமக பினமுகரின் விபரீத செயல்!

திருத்தணியில். டிக் டாய் வீடியோவினால் எழுந்த பிரச்சனையில் மனமுடைந்த நபர் நண்பரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருத்தணியில், ஏரியில் வாலிபரின் உடல் மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, விசாரணையில் அந்த நபர் தாழகாடு பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் வெங்கட்ராமன் என தெரிய வந்தது.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம், அப்பகுதியில் தலித் பிரிவினரை பற்றி தரக்குறைவான கருத்துகளை தன் நண்பர் விஜியுடன் பேசி அதை டிக் டாக் மூலம் பதிவேற்றியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் உடனடியாக அவரை கைது செய்ய வலியுறுத்தினர்.

இந்த பிரச்ச்னையில் வெங்கட் ராமன் மீது வழக்கு பதிவு செய்யபட்டது, மேலும் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்து வந்த வழக்கின் தீர்ப்பை நினைத்து அதிகமான தண்டனை கிடைத்து விடுமோ என பயந்து போன வெங்கட் ,எல்லாப் பிரச்ச்னைக்கும் காரணமான தனது நண்பர் விஜியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, வேறு வழியில்லாமல் தானும் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டாக செய்த விஷயம் விபரீதமாக முடிந்து விட்டது.