பொம்பளனா உனக்கு அவ்ளோ கேவலமாடா? விபச்சாரியாக்கிய இளைஞனை தேடிச் சென்று சம்பவம் செய்த டிக்டாக் பெண் அடிமைகள்!

டிக் டாக்கில் தங்களை விலைமாதர்கள் போல் விமர்சித்ததாக தேனியைச் சேர்ந்த பெண் மீது மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது டிக் டாக் வீடியோதான். இந்த செயலி மூலம் சினிமா பாடல்களுக்கு வாயசைத்து பலர் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த செயலி மூலம் பலரின் குடும்பமே நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை நிரந்தரமாக தடை செய்வதற்கான பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்மீது மதுரையைச் சேர்ந்த கயல் மற்றும் மீனாட்சி என்ற இருவர் தங்களை டிக்டாக்கில் விலைமாதர்கள் போல் விமர்சித்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கயல் என்பவர் இந்த வீடியோவால் தனது கணவனால் கைவிடப்படும் நிலையில் தவித்து வருவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சுகந்தி என்பவர் சென்னையில் சினிமா ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரும் டிக்டாக் செயலி மூலம் பல்வேறு வீடியோக்களை தனது பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் மீது கூரிய புகாரின் பேரில் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

அப்போது அங்கு சென்று தன் மீது ஏற்பட்ட குற்றச்சாட்டை மறுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சுகந்தியும் இரு பெண்கள் மீது தன் மீது அவதூறாக சுகந்தி பரப்புவதாக காவல்துறையினரிடம் பதிலுக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் என்ன செய்வதென்றே தெரியாமல் திக்கு முக்காடிள்ளனர்.

இதையடுத்து சுகந்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது சுகந்தியின் கணவன் ராணுவத்தில் பணியாற்றுவதால் சுகந்தியும் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து டிக்டாக் செயலி மூலம் வீடியோ பதிவு செய்து அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவேற்றிய வந்துள்ளார். இதையடுத்து சுகந்தி கூறியதாவது மீனாட்சி மற்றும் ஆகிய இருவரின் நடவடிக்கை பிடிக்காததால் அவர்களிடம் இருந்து சற்று விலகி இருந்ததாகவும் ஆனால் அவர்கள் ஆள் வைத்து தன்னை மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பேக் ஐடி மூலம் மீனாட்சி மற்றும் கயல் ஆகிய இருவரையும் விலைமாதர்கள் என விமர்சனம் செய்த சுகந்தியின் நண்பரான நெல்லையைச் சேர்ந்த நபரை தேடிச் சென்று அவரை தெருவில் விட்டு விளாசிள்ளனர். அதையும் வீடியோவாக பதிவு செய்து டிக்டாக்கில் பதிவிட்டது தான் தரமான சம்பவம். இந்நிலையில் ஃபேக் ஐடி மூலம் பெண்களை விமர்சிப்பவர்களுக்கு இந்த மாதிரியான தண்டனை தான் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.