தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்களின் குடும்ப வாரிசுகள் எங்கே போயின? உதயநிதிக்கு எதிராக கேள்வி எழுப்பும் துக்ளக் பத்திரிகை!

உதயநிதிக்கு பதவி கொடுத்தது நியாயத்திலும் நியாயம் என்று தி.மு.க.வினரே பதிவு போட்டு வருகிறார்கள்.


ஏனென்று கேட்டால், தேர்தல் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தாராம். ஏன், வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் சுற்றுப்பயணம் போக மாட்டாரா என்பதுதான் கேள்வி. இந்த நிலையில், தி.மு.க.வில் முக்கியத் தூண்களாக கருதப்பட்ட ஐம்பெரும் தலைவர்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா என்று கேள்வி எழுப்பி, அதற்கு விடையும் கொடுத்திருக்கிறது துக்ளக் பத்திரிகை.

அண்ணாவின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளத்தை அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக வின் பக்கமே அண்ட விடவில்லை. அதனால் தன்னுடைய வைத்திய செலவுக்குக்கூட பணம் புரட்ட முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். டாக்டர் பரிமளத்தின் வாரிசுகளைப் பற்றி தி.மு.க.வில் யாருக்குமே தெரியாது. 

ஈ.வி.கே.எஸ். சம்பத்துக்கும் கருணாநிதிக்கும் நல்ல உறவு உண்டு. திராவிட நாடு விவகாரத்தில் அவர் அண்ணாவுடன் கோபித்துக்கொண்டு, தனியே கட்சி தொடங்கியதும், அவரையும், அந்தக் குடும்பத்தையும் மறந்துவிட்டார் கருணாநிதி. தன்னுடையம் முக்கிய எதிரியாக கருதிய மதியழகன் மீது 1970 லஞ்ச ஊழல் குற்றம் சாட்டி ராஜினாமா செய்ய வைத்தார் கருணாநிதி. தமக்கு போட்டியாக வருவார் என்பதாலேயே பொய்க் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவரது வாரிசுகளும் அரசியலில் இல்லை.

கருணாநிதியால் ஒதுக்கப்பட்ட பேராசிரியர் நெடுஞ்செழியன் தி.மு.க.விலிந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து அமைச்சரானர். தி.மு.க.வில் இருந்திருந்தால், அந்தப் பதவிகூட அவருக்குக் கிடைத்திருக்காது. நெடுஞ்செழியனுக்குப் பிறகு அவரின் வாரிசுகளைப் பற்றி திமுக வினருக்குத் தெரியாது.

என்.வி.நடராஜன் 1975ல் காலமானார். அவருடைய மகன் என்.வி.என்.சோமு கருணாநிதி தலைமையில் தி.மு.க.வில் இருந்தார். அவரது மகள் கனிமொழிக்கு தி.மு.க. சார்பில் ஒரு முறை சீட் கொடுக்கப்பட்டு, அதன்பிறகு கண்டுகொள்ளப்படவில்லை.

தி.மு.க.வின் ஆரம்ப காலத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகக் கூட இல்லாத கருணாநிதியின் குடும்பம்தான் இப்போது தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றியுள்ளது. இப்போது உதயநிதியும் அவருக்குப் பின்னே இன்பநிதியும் வந்துவிட்டதால், இனி யாரும் உள்ளே நுழைய முடியாதுப்பா...