பள்ளி ஆசிரியர், கர்ப்பிணி மனைவி, மகன்! வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட திக்திக் சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் இவர் அங்கு உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பியூட்டி என்ற மனைவியும் அங்கன் என்ற மகனும் உள்ளார். இவர்கள் அதே பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே எந்த ஒரு தவறும் ஏற்படாமல் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆசிரியரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அவர்களின் குடும்பத்தை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை வீட்டின் அருகில் விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது இதையடுத்து அப்பகுதியில் உள்ள அனைவரும் திருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆனால் ஆசிரியரின் குடும்பத்திலிருந்து யாரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது . 

இந்நிலையில் அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது வீடு உள்ளே பூட்டிய நிலையில் இருந்தது. இதையடுத்து கதவைத் தட்டி பார்த்தபோது அவர்கள் யாரும் திறக்காத நிலையில் உடனே பயந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் மூவரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்நிலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் மர்மமான முறையில் அவர்களது வீட்டிற்குள் நுழைந்த அவர்களை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் யாரேனும் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை கொலை செய்துள்ளார்களா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்