3 MLAக்கள் பதவி பறிப்பு விவகாரம்! அமமுக வெற்றிவேல் அதிரடி அறிவிப்பு!

அமமுக பெரம்பூர் வேட்பாளர் வெற்றிவேல் பேட்டி :


கலைச்செல்வன் , ரத்னசபாபதி , பிரபு மூன்று பேரும் அமமுகவில் இல்லை , அவர்கள் மூன்று பேரும் அதிமுக தான் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால் குறுக்குவழியில் இதுபோன்று அதிமுகவினர் செயல்படுகின்றனர் தமிமுன்அன்சாரி திமுக ஆதரவு கொடுத்தால் தவறு இல்லை , ஓபிஎஸ் அதிமுக எதிராக வாக்களித்தால் தெரிவித்தது தவறு இல்லை ஆனால் அந்த மூவர் எங்களுடன் தொடர்பில் இருந்தால் மட்டும் தவறா ? நடவடிக்கை எடுப்பார்களா ?

சபாநாயகர் ஒருதலைபட்சமாக தொடர்ந்து செயல்படுகிறார் . அதிமுகவினருடைய இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எல்லாம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் . சபாநாயகர் மீது ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் பலனில்லை. அந்த மூன்று பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களுக்கு அமமுக துணை நிற்கும் . சட்டரீதியாக அனுகாமல் தேர்தலை சந்திக்க தயார் . அந்த மூவருக்கும் அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க தயார் ஆனால் முடிவை அவர்கள் எடுப்பார்கள்