பொடுகு தொல்லை தாங்கமுடியலயா! இந்த இரண்டு பொருள் போதும் சரிசெய்ய!

முட்டை, தயிர் இவை இரண்டு பொருள்கள் மட்டுமே போதும் உங்களுடைய தலையில் உள்ள பொடுகை முழுமையாக நீக்க.


முட்டை, தயிர் இவை இரண்டு பொருள்கள் மட்டுமே போதும் உங்களுடைய தலையில் உள்ள பொடுகை முழுமையாக நீக்க.முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் யோகர்ட்டை கலந்து நன்றாக அடிக்கவும். இதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் விடவும். பின்னர் மிருதுவான ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும். யோகர்ட் என்னும் சுவையூட்டப்பட்ட தயிரை அனைவரும் விரும்புகிறோம். சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கிய நோக்கிலும் யோகர்ட் சிறந்ததாகும். உங்கள் மேனிக்கு அழகூட்டும் பண்புகளும் யோகர்ட்டுக்கு உண்டு.

வாழைப்பழத்தை கிண்ணம் ஒன்றில் வைத்து கூழாக நசுக்கவும். அதனுடன் யோகர்ட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் தேனையும் சேர்க்கவும். பிரஷ் ஒன்றை பயன்படுத்தி இதை எடுத்து தலை மற்றும் கூந்தலில் படும்படியாக தேய்க்கவும். 25 முதல் 30 நிமிடங்கள் விட்டு, ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து நுரை வருமளவுக்கு நன்றாக அடித்து கலக்கவும். அதனுடன் யோகர்ட்டை சேர்த்து இரண்டையும் கலக்கவும். இக்கலவையை முகத்தில் பூசி, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு நன்றாக கழுவவும்.