தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இத்தனை படுக்கைகள் போதுமா?

சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை குறித்த பட்டியல்களை தெரிவித்தார்.


கிண்டி மருத்துவமனையில், 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அடித்தளம், தரைத்தளம், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ ஆக்ஸிஜனுடைய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்கு 60 படுக்கைகள் மற்றும் சிறப்பு அறைகள் 40 என அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள் மற்றும் 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும், அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22,595, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 9,073 என மொத்தம் 31,668 படுக்கைகள் உள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7,815, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 5,749 மொத்தம் 13,564 படுக்கைகள் உள்ளன. 

தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவிட் மருத்துவமனையின் எண்ணிக்கை அரசின் சார்பாக 123 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 191 மருத்துவமனைகள் என மொத்தம் 314 கோவிட் மருத்துவமனைகளும், சென்னையைப் பொறுத்தவரை, அரசின் சார்பாக 12 மருத்துவமனைகள் தனியார் சார்பாக 76 மருத்துவமனைகள் என மொத்தம் 88 கோவிட் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவிட் சிறப்பு மையங்களின் எண்ணிக்கை அரசின் சார்பாக 516 மருத்துவமனைகள், தனியார் சார்பாக 2 மருத்துவமனைகள் என மொத்தம் 518 கோவிட் சிறப்பு மையங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, அரசின் சார்பாக 45 கோவிட் சிறப்பு மையங்களும், தனியார் சார்பாக 2 7. கோவிட் சிறப்பு மையங்களும் என மொத்தம் 47 கோவிட் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு முழுவதும், 75,000 படுக்கை வசதிகளுடன் கோவிட் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில், அரசின் சார்பாக 17,500 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும், அரசின் சார்பாக 49 பரிசோதனை நிலையங்கள், தனியார் சார்பாக 46 பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 95 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இதில், நாளொன்றுக்கு 35 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.