இது உங்கள் முகம் வயதாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறி! தீர்வும் இங்க இருக்கு!

வயது ஆக ஆக சருமத்தின் உறுதித்தன்மை வலுவிழந்து, உங்களின் தோல் தளர்வாக தோற்றமளிக்கும்.


வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் இது முதன்மையானது. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிக நேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரலாம். முதலில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். 

அவை சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மாய்ஸ்சரைசர் அல்லது foundation கிரீம்களை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் வருவதை குறைக்க நன்றாக உறங்குவது, புகைப்பழக்கத்தை தவிர்ப்பது, அதிகளவு மீன் எண்ணெய் எடுத்துக்கொள்வது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யலாம். உங்கள் உணவு பழக்கம் உங்கள் சருமத்தை பாதிக்கும் என்பதால் உணவில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

சருமம் உலர்ந்து இருந்தால் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் முகம், ஒளிரும் தன்மையை இழக்கிறது. மேலும் உங்கள் சருமத்தில் துகள்கள் சேர ஆரம்பித்து உங்கள் சருமம் இறுக்கமடையும். மேலும், உங்கள் சருமத்தில் புதிய செல்களின் பிறப்பு குறைவதால், உங்களின் மேல் அடுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். 

இதை சரி செய்ய இறந்த செல்களை நீக்கினால் போதும். உங்களுக்கு மிருதுவான சருமம் இருந்தால் உங்களின் தோல் மருத்துவரை அணுகுங்கள் அல்லது இறந்த செல்களை வாரம் ஒரு முறை நீக்க முயற்சி செய்யுங்கள். இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல், சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கினால் உங்கள் சருமம் முன்பு போல் மென்மையாகவும் மிளிரவும் செய்யும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த உங்களின் தோல் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.