வாசன் தோல்விக்குக் காரணம் கிடைச்சாச்சு..!

இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் ஏதோ ஒருசில இடங்களில் வெற்றி அடைந்ததை வைத்து, செம வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.


ஆனால், தோல்வி என்று சொன்ன ஒரே கட்சி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும்தான். ஏன் என்றால், ஒரே ஒரு இடத்தில்கூட அந்தக் கட்சி வெல்லவில்லை. இந்த நிலையில் இன்று பேசிய வாசன், நாங்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. அதுதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

சின்னமே இல்லாமல் தினகரன் டீம் ஜெயித்திருக்கும்போது, சின்னம் இல்லாத காரணத்தால் தோல்வி என்று சொன்ன வாசனுக்கு என்ன பதில் சொல்வது? எப்படியோ பேசத் தெரிஞ்சது போதும்னே…