கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு கால் வீக்கம் அடைவதன் காரணம் இதுதான்!

வயிற்றில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, அது அடிவயிற்றில் உள்ள ரத்த நாளங்களை அழுத்துகிறது. இந்த அழுத்தம் காரணமாக ரத்தம் வேகமாக செல்லமுடியாமல் காலில் தேங்கும் நிலை ஏற்படுவதாலே கால் வீக்கம் உண்டாகிறது.


காலை நேரங்களில் கால் வீக்கம் குறைவாக இருக்கும். நேரம் செல்லச்செல்ல வீக்கம் அதிகரிக்கும் நிறைய தண்ணீர் குடிப்பதும் உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறந்த முறையில் பலன் தருகிறது.

கால்களை கீழே இருந்து மேலாக நீவிவிடுவதன் காரணமாக வீக்கமும் வலியும் குறையும். வலதுபுறம் திரும்பிப் படுப்பதன் காரணமாகவும் வீக்கத்தைக் குறைக்க முடியும்கால் மட்டுமின்றி கை மற்றும் முகமும் வீக்கம் அடைந்தால் தாமதமின்றி மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்கவேண்டும். குழந்தை பிறந்த மூன்று வாரங்களுக்குள் இந்த வீக்கம் சரியாகிவிடும் என்பதால் வீண் கவலை வேண்டாம்.