பிக்பாஸ்ல இருந்து சித்தப்புவை வெளியே அனுப்புன உண்மையான காரணம் இதுதானாம்! கமல் டென்சன் ஆனதன் பின்னணி!

கடந்த வாரம் ரொம்பவும் ஜாலியாகத்தான் பஸ் அனுபவத்தை பிக்பாஸ் டீம் எதிர்கொண்டது. மீராவிடம் கமல்ஹாசன் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் குறித்துப் பேசினார். அப்போது தானாகவே உள்ளே வந்துதான் ஆஜரானார் சரவணன்.


கல்லூரி படிக்கும் காலங்களில் தானும் அப்படி பஸ்ஸில் ஏறி பெண்களிடம் வம்பு செய்திருப்பதை ஒப்புக்கொண்டார். உடனே, கமல்ஹாசனும் பார்வையாளர்களும் அந்த விவகாரத்தை சந்தோஷமாகவே எடுத்துக்கொண்டு சிரித்தார்கள்.

ஆனால், பஸ்ஸில் பெண்களை சீண்டிய விவகாரம் அநாகரிகமானது என்று திடீரென கிளப்பிவிடப்பட்டது. சரவணன் பெரிய தவறு செய்துவிட்டது போலவும், பிக்பாஸ் டீம் கண்டிப்பது போலவும் சீன் போட முடிவு எடுக்கப்பட்டது. 

அதனால் கன்ஃபஷன் அறைக்கு அழைக்கப்பட்ட சரவணனிடம், அவர் செய்த தவறு இமாலயத் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டு உடனடியாக பிக்பாஸில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். என்ன இப்படி நடந்துபோச்சே என்று கேட்டால், உண்மையில் சரவணன் வெளியே அனுப்பப்பட்ட காரணமே வேறு என்கிறார்கள்.

பிக்பாஸ் அறையில் இருந்தபோது கமல்ஹாசன் பற்றி சரவணன் மிகவும் மோசமாக சில கமென்ட்ஸ்களை சொன்னாராம். இதைக் கேட்டு கமல் டென்ஷன் ஆன காரணத்தாலே, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்களாம். என்னப்பா, இப்படி பண்ணிட்டீங்களே சித்தப்புவை.