சேலத்தின் அழகான கலெக்டர் மாற்றப்பட்டதில் மக்களுக்கு வருத்தமோ, வருத்தம்.
ரூ.5 கோடி விவகாரம்! ரோகிணியை எடப்பாடி பந்தாடியதன் உண்மை பின்னணி!

தி.மு.க. எம்.பி.க்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் மாற்றத்துக்குக் காரணம் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஏனென்றால், மேம்பாலம் திறப்பு விழாவில், தி.மு.க.வின் புதிய எம்.பி. முதல்வருக்கு குடைச்சல் கொடுத்தார். தேவையில்லாமல் அவர்களை அழைத்தது ஏனென்று நொந்துகொண்டார் முதல்வர்.
அப்போதே ரோகிணிக்கு சிக்கல் ஆரம்பமாகிவிட்டது என்றார்கள். அதன்பிறகு முதல்வரின் நெருங்கிய நண்பரும் கூட்டுறவுசங்கத்தை கையில் வைத்திருப்பவருமான இளங்கோவனுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை, அதனால் மாற்றப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது சொல்லப்படும் கதையே வேறு. ஆம், 5 கோடி ரூபாய் விவகாரத்தில் ரோகிணி சிக்கியதாக செய்திகள் பரபரக்கின்றன. அதாவது, சேலம் ஆட்சியராகப் பொறுப்பேற்ற ரோகிணி முதல் நடவடிக்கையாக சேலத்தில் இயங்கி வந்த கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுத்தார். அவரது அதிரடி நடவடிக்கையை அடுத்து, அப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வெள்ளைக் கல்குவாரிகள் அதிரடியாக மூடப்பட்டன.
மேலும் அங்கு இயங்கி வரும் மேக்னசைட் 18 கோடி ரூபாய் வரியாக செலுத்த செலுத்த வேண்டுமாம், ஆனால் ஆட்சியர் ரோகிணி 18 லட்சம் ரூபாய் மட்டுமே வரியாக அறிவித்தாராம். இந்த விவகாரத்தில் 17 கோடியை மிச்சப்படுத்தியதர்கு கைமாறாக 5 கோடி ரூபாய் கையூட்டு பெறப்பட்டதாகவும் இவர் மீது நேரடியாக தலைமைச் செயலாளருக்கு புகார் சென்றதாக சொல்கிறார்கள்.
இந்த தகவல் உண்மை என்று உறுதி செய்யப்பட்ட காரணத்தாலே, உடனடியாக மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்த்தாலே பால் வடியும் முகத்துடன் இருக்கும் கலெக்டர் இப்படி தப்பானவர்ன்னு சொல்றவங்களுக்கு இரக்கமே இல்லையா. நம்ப முடியவில்லை என்று சேலம் மக்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.