தமிழகத்தில் சினிமா திரை உலகில் எம்.ஜி.ஆர். என்கிற மூன்று எழுத்து மந்திர சக்திக்கு பிறகு ரஜினி என்கிற மூன்று எழுத்து மந்திர சக்தி குழந்தை முதல் பெண்கள் முதியவர்கள் வரை அவர்களது இதயத்தில் ஆணி அடித்தது போல். ரஜினி என்கிற பெயர் நிலைத்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அவரது ஸ்டைல் தான் சினிமா உலகில் வசூல் மன்னன் ஸ்டைல் மன்னன் பஞ்ச் டயலாக் மன்னன் என்றெல்லாம் பெயர் எடுத்தவர்.
ரஜினிகாந்த் அரசியல் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்..! பிரபல ஜோதிடரின் நச் கணிப்பு

அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 25 வருட காலமாக சொல்லிக் கொண்டே தான் உள்ளரே தவிர அரசியல் பற்றி திடமான முடிவு எடுக்காமல் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றியும் பல கட்சி தலைவர்களை கதிகலங்க வைத்து கொண்டே இருக்கிறார். இந்த நிமிடம் வரை கூட அரசியல் பற்றி அதன் பிரவேசம் பற்றி எந்த விதமான அறிக்கையும் உறுதியாக வெளியிட மறுக்கிறார் பல லட்சம் தொண்டர்களை அரவணைத்து நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் அறிக்கை எதிர்ப்பு அதரவு என பல போராட்ட களமான அரசியல் களத்தில் ரஜினி தாக்கு பிடிப்பாரா...?
ஒரு கட்சி தொடங்கி வழி நடத்த கூட முடியாமல் தடுமாறும் ரஜினி எப்படி பல கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டை காப்பாற்றுவார் என தெரியவில்லை இவர் அரசியலில் என்ன தான் ஆவார் முதல்வர் வேறு கட்சி தலைவர் வேறு என புது புது தகவல் தருகிறார் எது எப்படி ஆனாலும் ரஜினியின் அரசியல் பற்றி அவரது ஜாதகத்தில் என்ன தான் சொல்கிறது என்று பார்ப்போம்
ரஜினியின் ஜாதக பலன்கள்
1. ரஜினி சிம்ம லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்து உள்ளார். எங்கும் எதிலும் சிம்மாசனம் போடும் சிம்ம லக்னம். என்றாலும் இவர்க்கு அரசியலுக்கு சிம்மாசனம் கிடைக்குமா மேலும் பார்ப்போம்
2. அரசியலுக்கு உகந்த ராஜ கிரகங்கள் சூரியன் செவ்வாய் குரு சனி இவர்களை கொண்டு பார்க்கும் போது அவ்வளவு சிறப்பு இல்லை
3. அரசியலுக்கு மிக முக்கிய கிரகமாக மக்கள் கிரகம் சந்திரன் 6ல் நிற்பது பொது மக்கள் வெறுப்பை மட்டுமே சந்திப்பார்
4. அரசியலில் ராஜதந்திர அறிவை தரக்கூடிய செவ்வாய் 6ல் உச்சம் பெற்று இருப்பதால் ஆளுமை ராஜதந்திரம் என்கிற அறிவு இருக்காது.
5.2 ம் பாவத்தில் சனி கேது இருப்பதால் இவரது சொல்லில் தெளிவும் நம்பிக்கை உண்டாக்காது. பேச்சால் குழப்பம் சச்சரவுகள் மட்டுமே உண்டாகும்
6. லக்னாதிபதி 4-ம் பாவத்தில் நிற்பது நினைத்த வாழ்க்கை அமைய பெற்றார்.
7. பிரபலம் தரக்கூடிய 15 9 ஆகிய பாவாதிபதிகள் சூரியன் செவ்வாய் குரு ஆகிய கிரகங்கள் லக்னத்தை பார்ப்பதால் நல்ல பிரபல யோகத்தை தந்து உள்ளது.
8. சினிமா கலை யோகத்தை 5ம் பாவத்தில் உள்ள சுக்ரன் புதன் தந்து உள்ளது.
9- இவரது ஜாதகத்தில் செவ்வாய் ஒரே கிரகம் மட்டும் உச்சம் பெற்று இருப்பது மத்திய தர யோகம் உழைப்பிற்குரிய உயர்வு மட்டுமே உண்டாகும்
தற்போது ரஜினிக்கு புதன்திசை நடப்பில் இருப்பதால் இந்த புதன் திசை பாதக திசை என்பதால் இவர்க்கு உடல் நோய்கள் வாட்டி எடுக்கும் மேலும் முன்பு போல் வெற்றிப் படங்கள் கொடுக்க முடியாமல் போகும் இவர்க்கு புதன்திசை.20 31 வரை நடப்பில் இருப்பதால் அவ்வளவு ஒன்றும் சிறப்பு இல்லை.
போதாது குறைக்கு ஏழரைச் சனியின் கண்டச் சனி காலம் என்பதால் உடல் நிலையில் அக்கறை தேவை இந்த காலகட்டத்தில் அரசியல் என்பது இவர்க்கு ஏற்ற சூழ்நிலை ஒத்து வராமல் போய்விடும். அரசியல் பிரவேசம் செய்தாலும் இவர் ஆட்சியை பிடிப்பதும் முதல்வர் பதவி அடைவதும் என்பது நடக்காது. ஏதோ இவர் அரசியலில் வெற்று காகித அறிக்கைகள் மட்டுமே வருமே தவிர அரசியல் அதிகாரம் கை வராமல் போகும்.
நன்றி
ஆர். சூரியநாராயணமூர்த்தி