உஷார் மக்களே திவால் ஆகப்போகும் அடுத்த வங்கி இதுதான்.

பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியைத் தொடர்ந்து திவால் ஆகிறது கர்நாடகாவின் குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி.


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் ஒழிந்ததோ இல்லையோ. மக்களின் சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.இந்தியாவின் உள் நாட்டு வளர்ச்சி விகிதம், பொருளாதாரம், பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு முதலீடு, இந்தியாவின் தரக்குறியீடு என அனைத்தும் வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்த சூழலில்.!

திவால் நிலைக்கு தள்ளப்பட்ட 14 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைத்ததன் மூலம். வங்கிகளின் நிர்வாக செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த பட்ஜெட்டில் நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகள் சுருக்கப்பட்டு. தற்போது 12 வங்கிகளாக மாறி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவை மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. 

அதுமட்டுமின்றி மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் ஏய்ப்பு ஏற்பட்டு கடுமையான நிதிச் சிக்கலில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில். கடந்த ஜுலை மாதம் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளில், ரிசர்வ் வங்கி தலையிட்டு 1 லட்சம் வரையிலான முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி கொடுத்து வருகிறது. 

1 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருந்த பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினைத் தொடர்ந்து செய்வதறியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நாட்டில், குறிப்பாக வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு நாட்டு மக்களிடையே வங்கிகள் மீதுள்ள பார்வையின் மனநிலை மாறியுள்ள இந்த சூழலில்.

 கர்நாடகாவில் செயல்பட்டு வரும் குருராகவேந்திரா கூட்டுறவு வங்கியும் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதாக வந்துள்ள செய்தியால். அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள குரு ராகவேந்திரா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு. அவர்களின் முதலீட்டு பணத்தை திரும்பப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

ஸ்ரீ குருராகவேந்திர சஹாகரா நியாமிதா (SGRSBN) வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, ஜனவரி 10, 2020 அன்று வணிகம் நிறைவடைந்ததற்கு பிறகு, வங்கியால் எந்தவொரு புதிய கடன்களையும், முதலீட்டு முன்னேற்றங்களையும் புதுப்பிக்க முடியவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த வங்கியில் புதிய முதலீடுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடன் வழங்குதல் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட எந்தவொரு பொறுப்பையும் இனி குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி நடைமுறை படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த வங்கியின் நிதி நிலை மேம்படும் வரை அல்லது திவால் நிலைக்கு செல்லும் வரை ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தை தொடரும் எனவும்.

2020 ஜனவரி 10 ஆம் தேதி வணிக தேதியில் இருந்து. அடுத்த 6 மாத காலத்திற்கு இந்த வழிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என, இந்த வங்கிக்கு எழுத்துப்பூர்வ உத்தரவுகளை வெளியிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. அதன்படி ஸ்ரீ குருராகவேந்திர சஹாகரா நியாமிதா கூட்டுறவு வங்கி மீது ஒழுங்குமுறைச் சட்டப் பிரிவு 35 ஏ இன் பிரிவு 35 ஏ இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் ரிசர்வ் வங்கி அதிகாரம் செலுத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.

கடைசியாக, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி மீது இதுபோன்ற சட்டப்பிரிவுகளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவினை சந்தித்து வரும் இந்த வேலையில். இதுபோன்ற திவால் அறிவிப்புகளை தொடர்ந்து. வங்கிகள் மீதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எனும் கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறையாக பயணித்து வருவதைக் காண முடிகிறது.

மணியன் கலியமூர்த்தி