குழந்தைகள் படிக்கவேண்டிய முக்கியமான பாடம் இது, சொல்லித்தர பெற்றோரும், ஆசிரியரும் ரெடியா..?

இன்றைய சமூக சூழலில், குழந்தைகள் செல்போன், தொலைக்காட்சி தவிர வெளியுல்கம் அறியாமல் வளர்கிறார்கள்.


அதனால், அவர்களுடைய எண்ணம், சிந்தனை எல்லாமே தப்புத்தப்பாக இருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். சமீபத்தில் சில பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் வெளிப்பட்ட கருத்துக்களைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள். உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் உள்ளது, மனிதர்களை பகுத்தறிய வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லித்தருவது யார்?

இதோ இன்று பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் இருக்கும் முட்டாள்தனமான கருத்துக்களின் தொகுப்பு. வெள்ளையாக இருப்பவர்கள் நல்லவர்கள்: கருப்பாக இருப்பவர்கள் கெட்டவர்கள். சவரம் செய்தவர்கள் நல்லவர்கள். தாடி, மீசைக்காரர்கள் கெட்டவர்கள்.  படித்தவர்கள் நல்லவர்கள்: படிக்காதவர்கள் கெட்டவர்கள். பணக்காரர்கள் நல்லவர்கள்: ஏழைகள் கெட்டவர்கள். தெளிவான முகம் உடையவர்கள் நல்லவர்கள்: தழும்பு, மரு உடையவர்கள் கெட்டவர்கள். ஆங்கிலப்பாடல், கர்னாடக சங்கீதம் பாடுபவர்கள் நல்லவர்கள்: கானா பாடல், குத்துப்பாடல் பாடுபவர்கள், ஆடுபவர்கள் கெட்டவர்கள்.

சூப்பர் மார்க்கெட், மால்களில் பொருட்கள் வாங்குவோர் நல்லவர்கள்: சந்தை, அண்ணாச்சி கடைகளில் வாங்குவோர் கெட்டவர்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல்லவர்கள்: குடிசைகளில் வாழ்வோர் கெட்டவர்கள். சிறிய கட்டம் போட்ட அல்லது ப்ளெயின் ஷர்ட் அணிந்தவர்கள் நல்லவர்கள்: பெரிய கட்டம் போட்ட, நிறைய பூ போட்ட சட்டை அணிந்தவர்கள், லுங்கியைத் தூக்கிக் கட்டியவர்கள் கெட்டவர்கள்.

10.ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசுபவர்கள் நல்லவர்கள்: சென்னைத் தமிழில் நல்ல வார்த்தை பேசுவோரே கெட்டவர்தாம். .டர்மரிக் சோப் போட்டு குளிப்போர் நல்லவர்கள்: முகத்துக்கும் கால்களுக்கும் மஞ்சள் போட்டுக் குளிப்போர் கெட்டவர்கள்.  பட்டுச்சேலை கட்டுவோர் நல்லவர்கள்: ரேஷன் சேலை கட்டியோர் கெட்டவர்கள். கூந்தலை அவிழ்த்துவிட்டு, நிமிர்த்தி விட்டோர் நல்லவர்கள்; கொண்டை போட்டவர்கள் கெட்டவர்கள்.

14.கடற்கரையில் காற்று வாங்க நடப்போர் நல்லவர்கள்; கடற்கரையிலேயே தூங்குவோர் கெட்டவர்கள். வெளிநாட்டு நாய் வளர்ப்போர் நல்லவர்கள்: தெரு நாயை வளர்ப்போர் கெட்டவர்கள்.  பெரிய கோவில்களுக்குப் போகிறவர்கள் நல்லவர்கள்: உள்ளூர் காவல் தெய்வக் கோவில்களுக்குச் செல்வோர் கெட்டவர்கள்.  ஆட்டுக்கறி உண்போர் நல்லவர்கள்: மாட்டுக்கறி, பன்றிக்கறி உண்போர் கெட்டவர்கள். 

தனியார் பள்ளி மாணவர்கள் நல்லவர்கள்: மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் படிப்போர் கெட்டவர்கள்.இப்படியொரு சிந்தனையுடன் வளரும் மாணவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஏமாற்றமும், துன்பமும்தான் கிடைக்கும். அதனால் உண்மையை அறிய பெற்றோரும் ஆசிரியரும் உதவுவதுதான் முக்கியம்.