கணினி முன் பலமணி நேரம் வேலை செய்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை கண்டிப்பா படிங்க!

20 நிமிட நேரம் தொடர்ந்து கணினியைப் பார்த்து பணி செய்தீர்களா?


ஒரு சிறிய ஓய்வெளி தாருங்கள். கணினியில் இருந்து உங்கள் பார்வைச் சற்றே திருப்பி, உங்களிடமிருந்து 20 அடி தூரத்திலுள்ள ஒரு பொருளைப் பாருங்கள். அவ்வாறு பார்ப்பதன் மூலம் பார்வையின் தூர நிலைப்பு மாறுவதால் கண்ணிற்கு ஒரு மாற்றம் கிடைக்கிறது. களைப்புற்ற கண்களுக்கும் இது நல்ல மாற்றாகும்.

20 நிமிட நேர தொடர்ந்த பணிக்குப் பிறகு உங்கள் இருக்கையில் இருந்து சற்றே எழுந்து, ஒரு 20 அடி நடந்துவிட்டு வாருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் ஏற்பட்டிருக்கும் பிடிப்புகள் விலகும், இரத்த ஓட்டம் முழுமை பெறும். இதையும் தாண்டி.மிக அதிகமான நேரம் கணினியைப் பார்த்தே பணி செய்வோர், வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் இயற்கையான சூழலை கண்ணால் பார்த்துக் களியுங்கள்.

கண்களை கண்ணிமைகளால் தொடர்ந்து வேகமாக மூடி மூடித் திறவுங்கள். கண்ணில் ஈரம் சுரக்கும். மிக நுன்னிய தூசுகள் கண் பாவைகளில் படிந்திருந்தால் அவைகள் அந்த ஈரத்தில் சிக்கி ஓரத்திற்கு வந்துவிடும்.

உங்கள் இல்லத்தில் ஒரு சில பூச்செடிகளை வைத்து அவைகள் வளரும்போது அவற்றைப் பார்த்து ரசியுங்கள்.வெட்ட வெளியில் இரவு உணவிற்குப் பின்னரோ அல்லது காலைக் கடன்களை முடித்த பின்னரோ வேகமாக நடந்து பயிற்சி செய்யுங்கள். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று நட்சத்திரங்களை பார்த்து ரசியுங்கள். மனதில் இருந்து கண் வரை எல்லாம் ஒற்றை லயிப்பில் ஈடுபட முயற்சியுங்கள்.