தமிழ் டைரக்டரை ரூமுக்கு அழைத்துச் சென்று இந்தி நடிகை செய்த செயல்!

தமிழ் டைரக்டர் ஒருவரை தான் தனதுரூமூக்கு அழைத்துச் சென்றதாக பிரபல இந்தி நடிகை கூறியிருப்பது வைரல் ஆகி வருகிறது.


இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். மணிரத்னத்தின் குரு படத்தில் கூட நடித்திருப்பார்.

தமிழில் வாய்ப்புகள் சரியாக அமையாததால் இந்திப் பக்கம் போனார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை டர்ட்டி பிக்சராக எடுத்த போது இவர் தான் சில்க் வேடத்தில் நடித்தார்.

இதற்காக வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மிஷன் மங்கள் திரைப்படமும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில் திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து வித்யா பாலன் மனம் திறந்துள்ளார்.

தன்னை பலர் படுக்கைக்கு அழைத்திருந்தாலும் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை மறக்க முடியாது என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார். அப்போது தமிழ் படங்களில் தான் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்ததாக கூறிய அவர் இதற்காக சென்னை சென்று பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை சந்தித்ததாக தெரிவித்தார்.

நட்சத்திர ஓட்டலில் தனக்காக அந்த இயக்குனர் ரூம் போட்டு வைத்திருந்ததாகவும் பேசுவதற்காக ரெஸ்டாரண்ட்டில் சந்தித்த போது கடைசியில் ரூமுக்கு செல்லலாமா என்று அந்த இயக்குனர் தன்னை அழைத்ததாக வித்யா பாலன் கூறினார்.

ஓ தாரளமாக என்று கூறி தன்னுடைய ரூமுக்கு அந்த இயக்குனரை அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அப்போது தான் கதவை சாத்த வேண்டாம் என்று கூறியதும் இயக்குனரால் கோபத்தை அடக்க முடியவில்லை என்று கூறி சிரித்தார் வித்யா பாலன். பிறகு வந்த வேகத்தில் அந்த இயக்குனர் அந்த ரூமில் இருந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார் நடிகை.