திருவொற்றியூரில், கல்லூரி மாணவி ன் தாய், தனது மகள் அதிக நேரம் செல்போன் உபயோகித்தை கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏய் செல்போன்ல என்னடி பாக்குற? கையும் களவுமாக பிடித்த தாய்! அதிர்ச்சியில் மகள் செய்த பகீர் செயல்!
திருவொற்றியூர், காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில் வசிக்கும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் தான் ரகுபதி. செட்டித்தோட்டம் பகுதியில் இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். வறுமையில் குடும்பம் வாடினாலும் தனது மகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
இவரின் மகள் பெயர் வித்யாஸ்ரீ, இவர் திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தனது மகள் கல்லூரிக்கு சென்றதால், பெற்றோர்கள் வித்யாஸ்ரீக்கு செல்போம் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார்கள்.
இதற்கிடையில், வித்யாஸ்ரீ ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் தினமும் காலையில் ’பப்ஜி கேம்’ விளையாடுவது இவளது வழக்கம்.
நேற்று காலை தனது செல்போனில் யாருடனோ சேர்ந்து ‘பப்ஜி கேம்’ விளையாடி கொண்டிருந்த வித்யாஸ்ரீ. இவள் தினமும் விளையாடுவதை கண்ட அவளது தாய், வித்யாஸ்ரீவிடம் அப்படி என்ன பார்த்து கொண்டிருக்கிறாய்' என கோபமாக கேட்டுள்ளார். மேலும் 'படிக்காமல் இப்படி விளையாடி கொண்டிருக்கிறாயே' என திட்டிவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர், தாய் திட்டிய கோபத்தில் வித்யாஸ்ரீ அவரது தாயார் வெளியில் சென்றதும் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய தாய், கதவை திறக்குமாறு தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாக அவர் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் கண் கலங்கி அதிர்ச்சியில் உறைந்தார். கடைக்கு சென்று விட்டு வந்த சிறிது நேரத்தில், மகள் பிணமாக தூக்கில் தொங்கியதை பார்த்த அவர், கதறி அழுதார்.
இந்நிலையில், தகவல் அறிந்து காவல்துறையினர் தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடுவதை தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பலகோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மன அழத்தம், மன உளைச்சல் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், பின்வரும் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours),
State suicide prevention helpline – 104 (24 hours),
iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm)