உடைக்கப்பட்ட கதவு! உள்ளே நுழைந்த நூற்றுக்கணக்கான போலீஸ்! பெரும் பதற்றத்தில் புனித மேரி தேவாலயம்! அதிர்ச்சி காரணம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஜேக்கோபைட் பெரிசா, ஆர்த்தோடாக்ஸ் பெரிசா என்ற மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.


சினிமா படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சி ஒன்றில், இந்த பேண்ட் பெரிசா, இந்த தப்பு பெரிசா எனக் கேட்பார். பிறகு, பேசிக்கிட்டே இருந்தா எப்டிடா, அடிச்சிக் காட்டு, எனக் கூறி இரு தரப்பிற்கும் பெரிய மோதலை ஏற்படுத்திவிடுவார். அதுபோல, எர்ணாகுளம், பிரவோம் பகுதியில் உள்ள மலங்காரா சர்ச்களில் கடந்த சில ஆண்டுகளாக, ஜேக்கோபைட் மற்றும் ஆர்த்தோடாக்ஸ் பிரிவினருக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இதன்படி, கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கேரளாவில் உள்ள மலங்காரா மரபு சர்ச்கள் அனைத்தும் ஆர்த்தோடாக்ஸ் நடைமுறையை பின்பற்றும்படி தீர்ப்பு அளித்தது. ஆனால், இதனை அமல்படுத்த அங்குள்ள செயின்ட் மேரிஸ் சர்ச் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதன்படி, செயின்ட் மேரிஸ் சர்ச்சில் ஆய்வு செய்ய அம்மாவட்ட நிர்வாகத்தினர் வியாழக்கிழமை சென்றனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல் ஜேக்கோபைட்டுகள் பலர் ஒன்றுகூடி மறித்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நீடித்த இழுபறிக்குப் பிறகு, போலீசார், சர்ச் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனாலும், ஜேக்கோபைட் சமுதாயத்தினர் அங்கிருந்து அகலாமல் தொடர்ந்து கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால், போலீசார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.  

சமீபத்தில் இப்பகுதியில் உயிரிழந்த ஒருவரை ஜோக்கோபைட் பெரிசா, ஆர்த்தோடாக்ஸ் பெரிசா என மாறி மாறி இரு தரப்பினரும் 2 முறை அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.