மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு வகுப்பையில் குஜால்! தலைமை ஆசிரியரின் விபரீத செயல்!

வகுப்பில் உள்ள மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு சைடிஸ்சோடு மது அருந்தி மட்டையான தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம் நிர்த்தெம்பி எனும் கிராமத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி உள்ளது. இங்கு சுமார் 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மனோகர் என்பவர் உள்ளார். அவ்வப்போதுமாணவர்களுக்கு இவர் பாடம் எடுப்பதும் வழக்கம், அந்த வகையில் கடந்த வாரம் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க இவர் வகுப்பறைக்கு வந்துள்ளார்.

ஆனால் பாடம் எடுக்காமல் மாணவர்களை வெளியே சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட மனோகர் தான் கையோடு கொண்டு வந்திருந்த புல் பாட்டில் ரம்மை எடுத்துக் கொண்டார்.

மேலும் சைடிஸ் சகிதமாக வகுப்பறையில் தனக்கான மேஜையில் அமர்ந்து பெக் பெக்காக ரம்மை காலி செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் வகுப்பறையை பாராக மாற்றிய அவர் போதையில் வெளியே சென்று மயங்கியுள்ளார். விளையாடச் சென்று திரும்பிய மாணவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக இந்த தகவல் பரவியது. திரண்டு வந்த கிராமத்தினர் தலைமை ஆசிரியர் வகுப்பறையை பாராக மாற்றியதை செல்போனில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரல் ஆனது. இதனை அடுத்து விசாரணையில் மனோகர் தவறு செய்தது உறுதியானது.

உடனடியாக மனோகர் சஸ்பென்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே வேலை பார்த்த பள்ளியிலும் ஜெயக்குமார் இப்படி குடித்துவிட்டு குஜாலாக இருந்த காரணத்தினால் தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.