வயிற்று வலிக்கு மெடிக்கல் ஷாப் மாத்திரை! ரத்த வாந்தி எடுத்து செத்த மாணவன்! அதிர வைக்கும் காரணம்!

திருவண்ணாமலையில், மருந்துக் கடையில் வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்ட சிறுவன் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணி அருகே  அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன், ஹரிகரண் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.ஹரி  நேற்று வகுப்பறையில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட, நண்பர்கள்  அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் ஏதோ ஒரு மாத்திரை யை வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாத்திரையை சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்ற ஹரி, தொடர்ந்து வாந்தி எடுத்ததுடன், மயங்கியதால், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்த நிலையில் , நள்ளிரவில் இரத்த வாந்தி எடுத்த ஹரி காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுக் குறித்து பேசிய அவரது தாயார், மெடிக்கல் ஷாப்பில் தவறான மாத்திரை கொடுத்ததால் தான் மகன் பலியானதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைக்க்பட்டுள்ளது, அறிக்கை வெளியான பின்பு தான் உண்மை நிலை அறிய முடியும், இது குறித்த விசாரணை யை போலீசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

எனவே முறையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் தானாக கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.