ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் தலைமை பூசாரி! திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் ஆக்கிரமிப்பு விவகாரம்!

திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில்தான் இன்றைய தேதிக்கு உலகின் பணக்கார கோவில்.குறைந்தது 5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகளும்,விலையுயர்ந்த கற்களும் கொட்டிக்கிடக்கும் கோவில் அது.


அங்கே கோவிலுக்கு சொந்தமான ஒரு பழைமையான கட்டிடத்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆக்கிதமித்து இருக்கிறது.அவர்கள் உடனே வெளியேற வேண்டும்,என்ற கோரிக்கையை முன் வைத்து வரும் 30ம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணா விரதம் அறிவித்திருக்கிறார் கோவிலின் தலைமை சாமியாரான 48வது புஷ்பாஞ்சலி சாமியார்.கன்னியாகுமரியில் இருக்கும் முன்சிறை மடத்தைச் சேர்ந்த புஷ்பாஞ்சலிச் சாமியாரை மூப்பில் சாமியார் என்று மலையாளத்தில் அழைக்கிறார்கள்.

பத்மநாப சுவாமி கோவிலைப் பொறுத்தவரை இவர்தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்.அது ஏன் என்று தெரிந்துகொள்ள வரலாற்றில் கொஞ்சம் பின்னே போகவேண்டும்.திப்பு சுல்தான் திருவாங்கூர் நாட்டின் மீது படை எடுத்து வந்து செங்கன்னூர் கோட்டையில் துவங்கி ஆலுவா வரை தாக்கித் தகர்த்து பேரியாற்றின் கரையில் வந்து படைகளோடு தங்கினார்.

திருவாங்கூர் வீழ்ந்து விடுமோ,பதமநாப சுவாமி கோயில் பொக்கிஷங்கள் கொள்ளை போய்விடுமோ என்று அரசர் அஞ்சியபோது கன்னியாகுமரி முன்சிறை மடத்தைச் சேர்ந்த கோவிந்த பிரமானந்த தீர்த்தரின் பிரார்த்தனயால் பெரியாற்றில் வெள்ளமும்,பெரும் புயலும் ஏற்பட்டு திப்பு சுல்த்தான் திரும்பிப் போய்விட்டாராம்,

அதனால் திருவாங்கூர் அரசர் கார்த்திகை திருநாள் ராமவர்மா கோவிந்த பிரமானந்த தீர்த்தரை முதலாவது புஷ்பாஞ்சலி சாமியாராக நியமித்து வரம்பற்ற அதிகாரத்தை வழங்கினார்.ஆனால்,திப்புவால் முடியாததை இன்றைய ஆர் எஸ் எஸ் செய்து விட்டது.பத்மனாப சுவாமி கோவிலின் எதிரில் இருக்கும் மிதுனானந்த தீர்த்தம் என்கிற குளத்தின் கரையில் இருக்கும் ஒரு மிகப்பழைய கட்டிடத்தை ஆக்கரமித்து அதில் 

ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவாபாரதி அமைப்பின் பெயரால் ஒரு அனாதை சிறுவர் விடுதியை நடத்துகிறது.இது சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு , அங்கிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியேற வேண்டும் என்கிறார்,புஷ்பாஞ்சலி சாமியார். நாங்கள் சட்டப்படி இந்த பிரட்சினையை எதிர் கொள்வோம் என்கிறது கேரள பிஜேபி! .

அந்தக் கட்டிடத்தின் உள்ளே நுழையும்போதே உங்களை வரவேற்கும் கருப்புத் தொப்பி போட்ட ஹெட்கேவரின் படமே ஆர் எஸ் எஸ்ஸின் நிலையை உங்களுக்கு சொல்லி விடும் என்பதால் வரும் செப்டம்பரில்ல் சாமியார் மேற்கொள்ள இருக்கும் உண்ணா விரதத்தை கேரள அரசு எப்படி எதிர கொள்ளப் போகிறது என்பதை வைத்தே நாம் தீர்னானிக்க முடியும் என்பதுதான் உண்மை நிலவரம்.