திருமணமாகி ஆறே மாதத்தில் 2 மாத கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் காரணம்!

திருவள்ளூவர் மாவட்டம் பொன்னேரி அருகே 2 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள படியநல்லூரில் வசித்து வருபவர் ஆறுமுகம். போக்குவரத்து துறையில் பணிசெய்துவரும் இவரது மகள் சசிகலா பொன்னேரியை அடுத்த வ.உ சி நகரை சேர்ந்தவர் கணேசனுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் சசிகலா 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் .

எண்ணூர் துறை முகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் கணேசன் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு காலை வீடு திரும்பியபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி சசிகலா தூக்கில் தொங்கியபடி இருந்ததை  கண்டவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னேரி மாவட்ட கோட்டாட்சியர் நந்தகுமார், இரு வீட்டாரிடமும், உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தினார். மேலும் சசிகலாவிற்க்கு திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இருப்பினும் சசிகலாவின் உடற் கூறு ஆய்வின் முடிவை வைத்து தான் விசாரணையின் அடுத்த கட்ட நிலை தெரியும். அவரது கணவரிடம் விசாரணை தொடர்கிறது.