டூ வீலரின் பின்னால் மோதிய லாரி..! கணவன் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்! திருவள்ளூர் சோகம்!

திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் கணவன் கண் எதிரே மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் இவரது மனைவி ஜெயா இருவரும் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். மாலை நேரம் என்பதால் சாலையில் போக்குவரத்து சற்று அதிகமாகவே இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற யுவராஜ் மற்றும் ஜெயா இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.இந்நிலையில் ஜெயா என்பவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கணவர் கண் முன்னே மனைவி ஜெயா துடிதுடித்து இறந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த யுவராஜை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.