காதலிப்பதாக கூறி பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்! சாணிப்பவுடரை குடித்த சிறுமி! பிறகு நேர்ந்த விபரீதம்!

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்துவந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபடி, அருகில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். 2 ஆண்டுகளாக, அவர் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு, சுல்தான் சபீக் என்ற இளைஞர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அவர், கடந்த சில மாதங்களாக, சிறுமியை காதலிப்பதாகக் கூறி, நெருங்கிப் பழகியுள்ளார். ஆசை வார்த்தைகளைக்கூறி, சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். இவற்றை எல்லாம் போட்டோவாக எடுத்து வைத்து, சிறுமியை அடிக்கடி மிரட்டி, ஆதாயம் தேடி வந்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுமி, சாணிப்பவுடரை குடித்து, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

உடனடியாக, அவரை சிறுமியின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக, குறிப்பிட்ட இளைஞரை விசாரித்த போலீசார், நடந்த சம்பவங்களை உறுதி செய்தனர். பின்னர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.