பெற்ற தாய் முன்னிலையில் காதலன் செய்த அசிங்கம்..! அதிர்ச்சியில் காதலி எடுத்த விபரீத முடிவு! பல்லடம் திகுதிகு!

திருப்பூர் மாவட்டத்தில் தன்னை காதலிக்கவில்லை காதலன் பெற்றோரிடத்தில் கூறியதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பூர் மாவட்டம் குங்குமப்பாளையத்தை சேர்ந்த பிருந்தா என்பவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த சந்தோஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பிருந்தாவின் தாய் சாரதா கண்டித்துள்ளார். பின்னர் சந்தோஷை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற பிருந்தா, அவரை காதலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  

அப்போது சந்தோஷ், பிருந்தாவின் தாயாரை பார்த்து நாங்கள் காதலிக்கவில்லை. நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் பிருந்தா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தோஷ் அங்கிருந்து வெளியேறிய நிலையில் பலமுறை அவரை செல்போனில் பிருந்தா தொடர்பு கொண்டும் அதற்கு அவர் மதிப்பளிக்கவில்லை.

இதனால் சந்தோஷ் தன்னை உண்மையாக காதலிக்கவில்லை என்பதையும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து விட்டு கழட்டி விடவும், தன்னுடைய உடம்பிற்காக மட்டுமே காதலிப்பது போல் நடிப்பதையும் உணர்ந்துள்ளார். இதனால் வேதனையில் இருந்த பிருந்தா வீட்டில் மண்ணெண்ணைய் ஊற்றி தனது உடலுக்கு தீ வைத்துக்கொண்டார். பின்னர் பிருந்தா மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிருந்தா மரண வாசலுக்குள் நுழைவதற்குள் பேசிய வீடியோவில் ``சந்தோஷ் என்னை யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டான். நம்ப வெச்சு ஏமாத்திட்டான். அதனாலதான் தற்கொலை முயற்சி பண்ணேன்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.