திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் அரசு பேருந்து உரசிய விபத்தில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
லேசாக உரசிச் சென்ற எமன்! அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய இளைஞன்! கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த பயங்கரம்!

திருப்பூர் மாவட்டம் முத்து செட்டி பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த 30ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்
அப்போது அவருக்குத் தெரியாது அதுதான் தனது கடைசி பயணம் என்று. அவருக்கு அருகில் வலது புறமாக சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சற்றும் பொறுப்பில்லாத வகையில் திடீரென பேருந்தை இடது பக்கமாக திரும்பியதாக கூறப்படுகிறது.
இதில் பேருந்து அருண்குமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் உரசியது. இதனை சற்றும் எதிர்பாராத அருண்குமார் நிலைகுலைந்து பேருந்தை ஒட்டி சாலையில் விழுந்தார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது.
அருண்குமார் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.