என் கணவன் பல பெண்களை காதலிக்கிறார்! தகாத உறவு கொள்கிறார்! இளம் மனைவி திடுக் புகார்! அதிர்ச்சியில் போலீஸ்!

பல பெண்களை காதலித்து சீரழித்த கய(ண)வன்; தன்னையும் ஏமாற்றிவிட்டதாக உதவி ஆட்சியரிடம் பெண் கதறல்


காதலிப்பதாகக் கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தனது கணவன் தன்னையும் பண ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏமாற்றி விட்டதாகவும் உதவி ஆட்சியரிடம் இளம் பெண் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் 28 வயது கவுசல்யா.

உதவி ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் இவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூருவில் பேஷன் டிசைனராக இருந்தபோது, பேஸ்புக் மூலம் அறிமுகமான திருவண்ணாமலையை சேர்ந்த வாஞ்சிநாதனை திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.  

தன்னுடைய சேமிப்புப் பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை வாஞ்சிநாதன் செலவழித்துவிட்டதாகவும், இதையடுத்து தனது தந்தை தங்களுக்கு திருப்பத்தூரில் 3 லட்சம் ரூபாயில் கவரிங் நகைக்கடையை வைத்து கொடுத்ததாகவும், ஆனால் வியாபாரத்தைப் பெருக்குவதாகக் கூறி வாஞ்சிநாதன் தன்னுடைய 55 சவரன் நகைகளை விற்றுச் செலவழித்ததாகவும், உறவினர்களிடம் 7 லட்சம் ரூபாய் கடன் பெற்று திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

மதுபழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு பணம், நகை கேட்டு தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் திருப்பத்தூருக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ள கவுசல்யா, தான் தேடிச் சென்ற போது தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாஞ்சிநாதன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் பல பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதும் தெரிய வந்ததாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச் சென்றார்.

அப்போது தன்னை நடுரோட்டில் அடித்ததாகவும், பின்னர் தொலைபேசியில் ஆபாசமாகத் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மனு மீது உரிய விசாரணை நடத்த திருப்பத்தூர் நகர காவல் நிலையத்துக்கு சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.