திருப்பதி கோவிலில் லாரி டயருக்குள் தலை வைத்த முதியவர்! மோட்சம் கிடைக்கும் என விபரீதம்! அதிர்ச்சி சிசிடிவி!

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் வளாகத்திற்கு அருகே லாரியில் விழுந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு லாரி பால் ஏற்றிக் கொண்டு வந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அபிஷேகம் செய்ய பால் விநியோகம் செய்துவிட்டு திரும்ப புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து லாரியை பின்பக்கமாக ஓட்டினார் டிரைவர்.

அப்போது ஒரு முதியவர் திடீரென லாரியின் பின்பக்க டயரின் முன் விழுந்தார். இது தெரியாமல் ஓட்டுநர் லாரியை பின்னால் இயக்க லாரியின் சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழநத்ர. முதியவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றியதுடன், அவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.