சாதா காய்ச்சல்னு நினைச்சி மாத்திரை சாப்பிட்டா..! ஆனா இப்டி ஆயிடிச்சே..! கதறும் நெல்லை பெண் என்ஜினியர் குடும்பம்!

தனக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதை உணராமல் காய்ச்சலுக்கு தானாகவே மாத்திரை எடுத்துக்கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கணினி பொறியாளர் செல்வபாரதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர். 

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற செல்வபாரதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகாமல் சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும் என்று நினைத்த செல்வ பாரதி மருந்துக் கடைக்கு சென்று மாத்திரை சாப்பிட்டுள்ளார். காய்ச்சல் சரி ஆகாமால் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மிகவும் அஜாக்கிரதையாக இருந்ததால் அவருக்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் 3வது கட்டடத்தை தாண்டிவிட்டதாகவும், அதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை வரை சென்றதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே செல்வபாரதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் மழைக்காலம் என்பதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்புக் கசாயம் அருந்துவது நல்லது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டெங்கு பாதிப்புகள் குறித்து அன்றாடம் செய்தித் தாள்களில் படிக்கிறோம். தொலைக்காட்சியில் பார்க்கிறோம். இந்த செய்திகளை வாட்ஸ்ஆப்பிலும் பேஸ்புக்கிலும் ஷேர் செய்கிறோம்.

ஆனால் தனக்கு நோய் வரும்போது, நமக்கெல்லாம் அந்த பாதிப்பு வராது என நமக்குள்ளேயே முடிவு எடுத்துக்கொண்டு அஜாக்கிரதையாக செயல்படுவதால் இதுபோன்ற மரணங்கள் ஏற்படுகிறது. இனியாவது காய்ச்சல் என்று வந்தாலே சோம்பேறித்தனப் படாமல் உடனடியாக மருத்துவர்களை அணுகுங்கள்.