ஓரினச்சேர்க்கை ஆசைக்கு இணங்க மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்! நெல்லை பரபரப்பு!

திருநெல்வேலி: 2 நாட்கள் முன்பாகக் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளத்தைச் சேர்ந்த சிறுவனை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், பல இடங்களில் தேடிப் பார்த்த சிறுவனின் குடும்பத்தினர், இதுபற்றி தாழையூத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதன்போது, குறிச்சிக்குளம் கிராமத்தை ஒட்டி நான்கு வழிச்சாலை ஓரத்தில் முட்புதரில் ஒரு சிறுவனின் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதைச் சென்று பார்வையிட்டபோது தாங்கள் தேடிவந்த சிறுவன்தான் அது என போலீசார் உறுதி செய்தனர். சிறுவனின் தலையில் கல்லால் தாக்கி கடுமையான காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சிறுவனின் கால் சட்டை அவிழ்க்கப்பட்ட நிலையில் உள்ளதால், சிறுவனை யாரோ பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே அதே ஊரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மாயாண்டி என்பவனுடன் சிறுவனை கடைசியாக பார்த்தாக பலர் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவனை பிடித்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது சிறுவனை அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்றதாக கூறியுள்ளான் மாயாண்டி.

ஆனால் அதற்கு உடன்பட மறுத்து சிறுவன் அழுததாகவும் மேலும் தனக்கு நேர்ந்ததை அனைவரிடத்திலும் சொல்லப்போவதாகவும் சிறுவன் கூறியதால் ஆத்திரம் அடைந்து கல்லை எடுத்து தலையில் அடித்து கொலை செய்துவிட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளான் மாயாண்டி. ஓரினச் சேர்க்கைக்காக சிறுவனை கொலை செய்த மாயாண்டி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.