இளம்பெண் ஓட்டி வந்த கார்! 3 பேருக்கு எமனான விபரீதம்! நெல்லையில் கோரம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருமண நிகழ்ச்சிக்காக 6 பேர் சென்ற கார் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது இதில் காரில் வந்த 6 பேரில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மேலும் படுகாயமடைந்த 3 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தூத்துக்குடி கோவில்பட்டி அருகே நடக்கவிருக்கும் திருமணத்திற்காக திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போதுஇரவு நேரம் என்பதால் வாகன ஓட்டுநர் தூக்கத்திலிருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் கோவில்பட்டி அருகே வந்தபோது அவர்கள் அந்த கார் திடீரென நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக மோதியது இந்த விபத்தில்  காரில் பயணம் செய்த ராஜம்மாள் ,சரோஜா, ராஜாராம் ஆகிய 3 பேறும் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கார் டிரைவர் சுகன், செல்வலட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அருகில் உள்ளவர்கள் உடனே எட்டையபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டையபுரம் காவல் துறையினர் விபத்தில் இறந்த 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரை டிரைவிங் முழுமையாக பயிலாத பெண் ஒருவர் ஓட்டி வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.