அயோத்தி தீர்ப்பு! முஸ்லீம்களுக்கு எதிரானது மட்டும் அல்ல! இந்துக்களுக்கும் எதிரானது தான்! - திருமுருகன் காந்தி

அயோத்தி தீர்ப்பு மூலம் முஸ்லீம்களின் மசூதி பறிக்கப்பட்டிருப்பதாகவும் இதே நிலை எதிர்காலத்தில் இந்துக்களுக்கும் கூட வரும் என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.


சென்னையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அயோத்தியா தீர்ப்பு இன்று வந்திருக்கிறது , பாபர் மசூதி இடிக்கப்பட்டு 27ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளது இதனை எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதே சில அமைப்பினர் கொள்கையே தவிர அனைத்து இந்துக்களும் சொல்வதல்ல. வால்மீகியால் எழுதப்பட்டதை விட துளசிதாசர் எழுதிய இராமாயணம் தான் அனைவரிடமும் சென்று சேர்ந்தது.

அக்பர் காலத்தில் வாழ்ந்தவர் அவர், துளசிதாசர் ஆஞ்சிநேயர் கோவிலை அமைக்க கேட்டார். இப்போதும் அக்கோவில் உள்ளது. ஆனால் அப்போது ராமர் பிறந்த இடம் அயோத்தியில் என்றால் துளசிதாசர் ராமர் கோவில் கட்ட கேட்டிருப்பார்.

இது ராமர் பிறந்த இடம் என்ற கோரிக்கையை வைத்தது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் தான் இது வெகுமக்களின் கோரிக்கை அல்ல. வன்முறை இயக்கங்களின் கோரிக்கை தான் இது . ஹே ராம் என்று கூறிய காந்தி கூட இது பற்றி கூறவில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது வன்முறை, பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் சிலை.வைக்கப்பட்டது வன்முறை எனக்கூறுகிறது நீதிமன்றம். ஒரு தரப்பினர் கோரிக்கையை எப்படி அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்? இது போல் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தளங்களை அபகரிக்கமடமாட்டது என்பதற்கு என்ன நம்பிக்கை உள்ளது?

வன்முறையை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது? காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் என்பது சங்கரமட கோவில் அல்ல அங்குள்ள நெசவாளர் கோவில் இது அவர்களிடம் சேர்க்கப்படுமா? தில்லை நடராஜர் கோவில் தமிழர் கோவில் சமஸ்கிருதர் இடமுள்ளது அது எளிய மக்களிடம் ஒப்படைக்கப்படுமா?

மயிலை கபாலீசுவரர் கோயில் கபாலி என்று பெயர் வைக்கின்றவர்களிடம் இல்லை இதற்கெல்லாம் என்ன செய்ய போகிறோம்., இதனால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல நிலம் வைத்துள்ள எழை எளிய மக்களுக்கு இதும் வரும் காலங்களில் வருமோ என்ற ஐய்யமுள்ளது. இந்துவா அமைப்புகள் வன்முறை மட்டுமே விரும்புகின்றன, இது வன்முறைக்கு கிடைத்த. வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.