சமீபத்தில் லண்டன் கூட்டத்தில் திருமாவளவன் பேசிய விவகாரம் இன்னமும் நெருப்பு போன்று எரிந்துகொண்டே இருக்கிறது. விடுதலைப் புலிகள் சொன்னதைக் கேட்டுத்தான் கூட்டணி வைத்தோம் என்று திருமாவளவன் சொன்ன விவகாரம் அவருக்கே ஆப்பு வைக்கிறது.
திருமாவின் எம்பி பதவிக்கு ஆபத்து..! விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தடை..? பரபரப்பு ரிப்போர்ட்!

ஆம், இந்தியாவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போதும் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அந்த இயக்கத்துக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பதுதான் சட்டம்.
ஆனால், அரசியல் கட்சி நடத்திவரும் திருமாவளவன், கட்சி நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் சொன்னபடி நடத்துவது தேச துரோகம் என்று பா.ஜ.க.வினர் குரல் கொடுக்கிறார்கள். திருமாவளவனை ரிமோட் கண்ட்ரோல் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கி வருகிறார்கள்.
வெளிநாட்டு இயக்கம் ஒன்று தமிழக அரசியல் கட்சியை கண்ட்ரோல் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று பா.ஜ.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராகி வருகிறார்கள். திருமாவின் எம்.பி. பதவிக்கும் ஆபத்து வரும் என்கிறார்கள்.
எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம். விவகாரம் பெரிதாகும் பட்சத்தில் திருமாவளவனின் விசிகவிற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்தை கூட பாஜக அனுதாபிகள் அணுக முடிவெடுத்துள்ளனர். இதனால் திருமாவிற்கு தலைவலி தான்.