பெண்களுக்காக குரல் கொடுக்கும் திருமாவளவன்! காயத்ரி ரகுராம் பெண் இல்லையா?

காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டிசிறுவள்ளூர் கிராமத்தைச் சார்ந்த ரோஜா என்னும் இளம்பெண் காதலின் பெயரால் வஞ்சிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த கொலையை ஆணவக் கொலை என்று வகைப்படுத்தி தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார் திருமாவளவன். காரை கிராமத்தைச் சார்ந்த ராஜேஷ் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து ரோஜாவைக் காதலிப்பதாக நடித்து ஏமாற்றி இருக்கிறார்.

திருமணம் செய்யும்படி வற்புறுத்திய ரோஜாவைக் கடந்த 21.11.2019 அன்று ராஜேஷ் அழைத்துச் சென்ற நிலையில் 26.11.2019 அன்று பரந்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரோஜாவின் உடலெங்கும் காணப்பட்ட சூட்டுக் கொப்பளங்கள் அவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. இது திட்டமிட்ட ஆணவக்கொலையே ஆகும். 

ஆனால், முதலில் ‘சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விடுதலைச்சிறுத்தைகளின் போராட்டத்துக்குப் பின்னர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், தற்கொலைக்குத் தூண்டுதல் என மாற்றி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரோஜாவைக் காதலித்து ஏமாற்றி கொலை செய்தவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவனைச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், மைய மாநில அரசுகள் ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது

இதேபோன்று தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவர் பிரியங்கா என்பவர் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுப் பின்னர் உயிருடன் கொடூரமாக எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கெதிரான இத்தகைய கொடூரங்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறன. பெண்களுக்குரிய பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை கடுமையாக்க வேண்டுமென மைய மாநில அரசுகளை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இந்நிலையில், ரோஜாவையும் பிரியங்காவையும் இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று திருமா கேட்டுக்கொண்டுள்ளார்.

ரோஜா, பிரியங்கா மட்டும்தான் பெண்களா, காயத்ரி ரகுராம் பெண் இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க.வினர். என்ன பதில் சொல்லப்போகிறார் திருமா.