திருமாவின் மூத்த சகோதரி பானுமதி கொரோனாவால் மறைந்தார்.. வைகோ கண்ணீர் இரங்கல்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி திருமதி பானுமதி அம்மையார் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று வைகோ கடிதம் எழுதியிருக்கிறார்.


தன் சகோதரி மீது எல்லையற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தார். அவர் சென்னையில் தங்கியிருக்கின்ற நாட்களில், அவருக்கு உணவு அனுப்புவதிலிருந்து அவரை தாயைப் போலவே பாசம் காட்டி ஊக்குவித்தவர் பானுமதி அம்மையார்.

தலையில் இடி விழுந்ததைப் போல் இந்தச் சோக மரணம் தொல்.திருமா அவர்களின் உள்ளத்தைச் சுக்குநூறாக்கிவிட்டது. ஆறுதலும், தேறுதலும் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.