திமுகவுக்கு கல்தா..! முழுசா கூட்டணி மாறுன திருமாவை பார்க்கணுமா? 25ம் தேதி காத்திருக்கும் ட்விஸ்ட்!

வரும் 25ம் தேதி கடலூரில் கட்டப்பட்டிருக்கும் ராமசாமி படையாச்சியார் நினைவு மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை பாராட்டிப் பேசி தன்னுடைய கூட்டணி தர்மத்தை நிலைநிறுத்துவார் திருமாவளவன் என்பதுதான் அரசியல் ஹாட் டாக்.


ஏனென்றால், ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டப திறப்புவிழா அழைப்பிதழில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அரசு விழாவில் அந்தத் தொகுதி எம்.பி. பெயர் இடம் பெறுவது சகஜமான ஒன்றுதானே என்று தோணலாம். 

டாக்டர் கிருஷ்ணசாமி இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாத சூழலில், அந்த இடத்தைப் பிடிக்க திருமாவளவன் ஆசைப்படுகிறார் என்பதுதான் உண்மை என்கிறார்கள். ரவிக்குமார் மட்டும்தான் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்திருக்கிறார். திருமா தனியே பானை சின்னத்தில்தான் ஜெயித்திருக்கிறார் என்பதால், அணி மாறுவதால் எந்த பிரச்னையும் வராது என்கிறார்கள்.

ரவிக்குமாருக்கும் தி.மு.க.வுக்கும் ஏற்கெனவே நல்ல புரிதல் இருப்பதால், அவருக்கும் சிக்கல் வராது. ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையாக பறக்கலாம் என்பதுதான் திருமாவின் திட்டமாம்.

அடப் போங்கப்பா.

பின்குறிப்பு: திருமாவளவன் இந்த் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், இந்த நிகழ்ச்சியை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணிப்பு செய்கிறதாம்.