திமுகவுடன் சேர்ந்து முஸ்லீம்கள் முதுகில் குத்திய திருமா! என்ஐஏ சட்டத்திற்கு ஆதரவு அளித்த பரபரப்பு பின்னணி!

இரட்டை வேடம் போடுவதில் எப்போதும் தி.மு.க. கில்லாடி. கூடங்குளம், ஹைட்ரோ கார்பான் போன்ற விவகாரங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, இப்போது அதனை எதிர்த்து போராடுவதிலும் தீவிரம் காட்டுவார்கள்.


இரட்டை வேடம் போடுவதில் எப்போதும் தி.மு.க. கில்லாடி. கூடங்குளம், ஹைட்ரோ கார்பான் போன்ற விவகாரங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, இப்போது அதனை எதிர்த்து போராடுவதிலும் தீவிரம் காட்டுவார்கள். அதாவது, தி.மு.க.வினர் ரொம்பவும் நல்லவங்களாம்.

அந்த வகையில் இப்போது அவர்களது அடுத்த முகமூடி கழன்று விழுந்துள்ளது. திருத்தப்பட்ட என்.ஐ.ஏ. சட்டத்தை தி.மு.க. நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. ஆனால், ஓட்டுப் போடும் விவகாரத்தில் எதிர்த்து வாக்களிக்காமல் நல்ல பிள்ளையாக அமர்ந்துவிட்டது.

நல்லவேளையாக தமிழகத்தில் இருந்துபோன கம்யூனிஸ்ட்காரர்கள் தைரியமாக எதிர்த்து வாக்களித்தார்கள். இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலை என்னவாக இருந்தது என்று கேட்கும்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்தார்கள்.

இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்பதற்காக, அன்று கூட்டத்திலே கலந்துகொள்ளாமல், சொந்த பிரச்னைக்காக ஊர் திரும்பிவிட்டாராம் திருமாவளவன். இன்னொரு கூட்டாளியான ரவிக்குமாரை சொல்லவே வேண்டியதில்லை, எப்போதும் போல் தி.மு.க. என்ன செய்கிறதோ, அதையே செய்திருக்கிறார். ஆக, தி.மு.க.தான் கொள்கை இல்லாத கொள்ளைக்கூட்டம்னு பார்த்தா, திருமாவளவனும் அப்படித்தானோ..?