திருமா சறுக்கல் எதிர்பாராதது. காயத்ரிக்கு எதிர்வினையாக ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை! சொல்வது யாருன்னு தெரியுமா?

இந்துக் கோயில் பற்றி திருமாவளவன் பேசிய விவகாரத்திற்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.


அதோடு பிரச்னை முடிந்துவிட்டது என்று பார்த்தால், விவகாரமாகப் பேசிய காயத்ரி ரகுராமுக்கு எதிராக வில்லங்கமாகப் பேசியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து டாக்டர் ருத்ரன் வெளியிட்டுள்ள பதிவு இது.

திருமாவளவன் பேசுவது இதுதான். நான் பேசியதை நியாயப்படுத்த விரும்பவில்லை; இஸ்லாமிய கிருத்துவ மதங்களை விட்டுவிட்டு வேண்டுமென்றே இந்து மதத்தைத் தாக்கவில்லை; இன்றும் பெரியவர்கள் இவ்வகைக் கலவியைக் காட்டும் சிற்பங்களை, தானாய் கைப்பேசியில் வந்து விழும் அவ்வகைப் படங்களை அசிங்க பார்க்காதே என்றுதான் சிறார்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

பேச்சு வேகத்தில் அது வந்து விட்டது, இந்து மதத்தைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்தோடு சொல்லவில்லை இப்படி வழக்கம் போல் தெளிவாக நிதானமாக கண்ணியமாகப் பேசிய திருமா, காயத்ரி குறித்துப் பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை,.

அவரிடமிருந்து இவ்வகை அநாகரிக எதிர்வினை எதிர்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இதை ஆமோதிக்கவும் முடியாது. இந்த கடைசி சறுக்கல், அவ்வளவு நேரம் நிலைநாட்டிய கண்ணியத்தை அழித்து விட்டது என்பது வருத்தமளிக்கிறது, எரிச்சலும் வருகிறது.

அவள் தற்குறியாகவே இருந்தாலும் திருமா ஒரு நம்பிக்கையூட்டும் தலைவனில்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படி என்ன பேசினார் திருமா? பெண்களை வைத்து வியாபாரம் செய்பவள், ஆடைகளை அகற்றி உடலைக் காட்டுபவள் என்ற ரீதியில் திட்டியிருக்கிறார் திருமா.

திருமா இது தகுமா?