திருபுவனம் ராமலிங்கம் கொலை! SDPI, PFI நிர்வாகிகளுக்கு தொடர்பு? என்ஐஏ அதிரடி ரெய்டு!

கும்பகோணம் திருபுவனத்தில் மதமாற்றத்த தடுத்து நிறுத்திய போது வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் ராமலிங்கம் வழக்கில் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது-


மதமாற்றம் செய்ய வந்தவர்கள் என்று கூறி சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அதே நாள் இரவில்  வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தின. இதனை தொடர்ந்து கடந்த மாதம் வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து ராமலிங்கம் கொலை வழக்கை கேராளவில் இருந்து வந்த தேசிய புலனாய்வு துறை ஏடிஎஸ்பி சவுகத் அலி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.  இன்று காலை  என்ஐஏ குழுவினர்  திருச்சி, பாலக்கரையில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில்,  அதிரடி சோதனை நடத்தினர். 

கொலையாளிகள் வந்து சென்ற கார் திருச்சி பகுதியை சேர்ந்தது என்பதால் அது பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமானதாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில்  இந்த சோதனை நடைபெற்றது. இதே போல் கும்பகோணம் மீன் மார்ககெட் அருகே உள்ள எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.